tamilnadu

‘பட்டாசு ஆலை சிறப்பு ஆய்வு தொடரும்’

சென்னை, மே 15 - விருதுநகர் மாவட்டத் தில் உள்ள சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழி லாளர்கள் உயிரிழப்பது தொடர் நிகழ்வாகி வரு கிறது. இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக பட்டாசு தொழிற் சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். 

இந்நிலையில், தீபாவளி முடியும் வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு தொழி லாளர் நலத்துறை தெரி வித்துள்ளது. 

வருவாய், தீயணைப்புத் துறை, தொழிலக பாது காப்பு உள்ளிட்ட பல் துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு, விதிமீறல் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.