tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு துவக்கம்! டிச. 26- முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை, டிச. 23 - இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லக் கண்ணுவின் 100-ஆவது பிறந்த நாள் டிசம்பர் 26 அன்று கொண்டாடப்படு கிறது.

இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா டிசம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கட்சியின் மாநிலக்குழு அலு வலகத்தில் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில், மூத்த தலை வர் ஆர்.நல்லகண்ணு செங்கொடி யேற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

பிறந்த நாள் விழா

அதேநாளில் மூத்தத் தலைவர் ஆர்.  நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளாகும். 100-ஆவது வயதில் அடி யெடுத்து வைக்கும் அவருக்கு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலை வர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணியினர் என பலர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் தோழர் கே.டி.கே. தங்கமணியின் 23வது நினைவுநாளும் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 29 - கலைவாணர் அரங்கில் விழா

தோழர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா டிசம்பர் 29 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெறுவதாக நூற்றாண்டு விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு விழா, தர்மலிங்கம் அற வழித் தொண்டு கல்வி அறக்கட்டளை யின் த.மணிவண்ணன் ஏற்பாட்டில் நடை பெறுகிறது. ‘மாமனிதருக்கு மக்கள் விழா - இரா.நல்லகண்ணு நூற்றாண்டு’ என்ற பெயரில் விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் கலந்து கொண்டு, நூற்றாண்டு வாழ்த்துப்பாடல், கவிதை நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

என். சங்கரய்யா, ஆர். நல்ல கண்ணு ஆகிய இரு பொதுவுடமைத் தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம்; வாழ்கிறோம் என்பதே பெருமை. அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படக் கூடிய தோழர் ஆர்.  நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில், சமூக ஆர்வலர் மேதாபட்கர், நீதியரசர்  சந்துரு, முன்னாள் தலைமைச் செய லாளர் வெ. இறையன்பு, விஐடி பல் கலைக் கழக வேந்தர் கோ. விசு வநாதன், சிபிஐ பொதுச்செயலாளர் து. ராஜா, சிபிஎம் மூத்த தலைவர் டி.கே.  ரங்கராஜன், மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, திரைக்கலைஞர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட் டோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு பழ. நெடுமாறன் கூறினார்.