tamilnadu

img

திருக்கோவிலூர் நூலகத்தின் 64 ஆம் ஆண்டு விழா

திருக்கோவிலூர், ஆக.28- திருக்கோவிலூர் நூலகத்தின் 64 - ஆம்  ஆண்டு விழா வாசர் வட்ட குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார உதியன் தலைமையில் நடைபெற்றது.  மு.கலியபெருமாள், நல்லாசிரியர் கு.நெடுஞ்செழியன்,  சிறுகதை எழுத்தாளர் ம.விருது ராஜா ஆகியோர் முன்னிலை வகித்த னர். நூலகர் ராஜேந்திரன் வரவேற்றார். நூலக பயன்பாட்டிற்கு நூல் அடுக்கினை நல்நூலகர் மு.அன்பழகனிடம் பி.எச்.கே. பஷீர் அகமத் நன்கொடையாக வழங்கினார்.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் கு.கல்யாண்குமார் நூல்களைப் பரிசாக  வழங்கினார். பணியாளர்கள் சு.சம்பத், ச. தேவி, சமூக ஆர்வலர் ஏ.நடராஜன் மற்றும் உறுப்பினர்கள், வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் மு.சந்தி நன்றி  கூறினார்.