tamilnadu

img

வேலூர் மாவட்டத்தில் நூலகங்களாக மாறும் 4 பள்ளிகள்

வேலூர், ஆக.8- தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக மாணவர் எண்ணிக்கை குறைந்த 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்  நூலகங்க ளாக மாற்றப்பட்டு தினக்கூலி ரூ. 315 அடிப்  படையில் நூலகர்களை நியமிக்க அரசு உத்தர விட்டுள்ளது. இதில்,வேலூர் மாவட்டத்தில்  4 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள் ளது.  தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை மிக வும் குறைந்த, குறிப்பாக ஒற்றை இலக்க எண்ணிக்கை கொண்ட மாணவர்களை கொண்ட பள்ளிகளை மூட மாநில அரசு நடவ டிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு மூடப்படும் பள்ளிகள் படிப்படியாக நூலகங்க ளாக மாற்றவும், நூலகங்களில் ஆயிரம் புத்த கங்களை வைத்து முழு நேர நூலகங்களாக செயல்பட வைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ஒன்றியம், நரசிங்கபுரம்கரிக்கல் ஆரம்பப் பள்ளி, குடியாத்தம் ஒன்றியம் ராமாபுரம் தொடக்கப்பள்ளி, ஜோலாப்பேட்டை  ஒன்றி யம் முகமதுபுரம் ஆரம்பப்பள்ளி, நாட்ராம்  பள்ளி ஒன்றியம் கோவிந்தாபுரம் ஆரம்பப் பள்ளிகள் நூலகமாக மாற்ற மாவட்ட கல்வித்துறை, நூலக ஆணைக்குழு நடவ டிக்கை எடுத்து வருகிறது.  

அதன்படி அடையாளம் காணப்பட்ட பள்ளிக்கட்டிடங்களில் நூலகம் அமைக்கும் பணியை நூலக ஆணைக்குழு மேற்கொண் டுள்ளது. முதலில் மூடப்படும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் வாடகை கட்டி டத்தில் இயங்கி வரும் அரசு நூலகம், மூடப்ப டும் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்படும். நூல கம் இல்லாத பகுதிகளில் மூடப்படும் பள்ளி களில் முதல்கட்டமாக 500 புத்தகங்களை கொண்டு நூலகம் தொடங்கப்படும். தயார்  நிலையில் வைத்திருக்க உத்தரவிடப் பட்டுள்ளது. புத்தகங்களுடன், நூலகம் அமைப்ப தற்கான நிதியை நூலக ஆணைக்குழு ஒதுக்கீடு செய்கிறது. அதோடு தொடங்கப் படும் நூலகங்களில், பன்னிரண்டாம் வகுப்பு  முடித்த அல்லது சிஎல்ஐஎஸ் படிப்பு முடித்த வர்கள் தினசரி கூலி ரூ. 315 அடிப்படையில் நிய மிக்கப்படுகின்றனர். அதோடு தொடங்கப்ப டும் நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை திறந்திருக்கும் என்றும் பொது நூல கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.