சென்னை, ஜூலை 7- சென்னை மெரினா சுந்தரி அக்கா கடையில் போலீசார் மீது தாக்கு தல் நடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ம.இளங்கோ (29). இவர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். இளங்கோ, சனிக்கிழமை தனது குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு அண்ணா சதுக்கம் பகுதியில் உள்ள சுந்தரி அக்கா மீன் உணவு கடையில் சாப்பிடுவதற்காக பணத்தை செலுத்தி, டோக்கன் கேட்டுள்ளார்.
அங்கிருந்த சுந்தரி என்பவர், பணத்தை பெற்றுக் கொண்டு, டோக்கன் வழங்காமல் இருந்துள்ளார். இதைப் பார்த்த இளங்கோ, சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அந்த கடை ஊழியர்கள் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ப.லோகு (27),சா.வினோத் (36), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிரா மத்தைச் சேர்ந்த ம.சக்திவேல் (27) ஆகிய 3 பேரும், காவலர் இளங்கோவை தாக்கி விரட்டினர்.
தாக்குதலில் காயமடைந்த இளங்கோ, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லோகு,வினோத்,சக்திவேல் ஆகிய 3 பேரையும் உடனடியாக கைது செய்தனர்.