tamilnadu

img

மார்ச் 12 முதல் சென்னையில் இருந்து பெங்களூரூக்கு 2-ஆவது வந்தே பாரத் ரயில்

சென்னை, மார்ச் 10-  சென்னை-பெங்களூர்-மைசூர் வழித் தடத்தில் ரயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் 2-ஆவது வந்தே பாரத் ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, மார்ச் 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

இப்போது அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் காலையில் மைசூரில்  இருந்து கிளம்பி, மதியம் சென்னை வந்த டையும். இந்த வந்தே பாரத் ரயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத் தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை யில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.