tamilnadu

img

தொடர் மழையால் 1000 ஏக்கர் உளுந்து பயிர் சேதம்: வேதனையில் விவசாயிகள்....

உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பூக்கள் உதிர்ந்து மஞ்சளாகி வேர்கள் அழுகி சேதமாகியுள்ளது. செடிகள் பூக்கள் உதிர்ந்து மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. சுமார் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட உளுந்து பயிர் சேதமாகி உள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநாவலூர் ஒன்றியத்தில் ஆரிநத்தம், ஆண்டிக்குழி, நகர், கூ.கள்ளக்குறிச்சி, வாணாம் பட்டு, பெரும்பட்டு, விஜயங்குப்பம், தொப்பையாங் குளம், எலவத்தடி, மன்னார்குடி, பிள்ளையார்குப்பம், கோட்டையாம்பாளையம், ஆத்தூர், திருநறுங்குன்றம், அயன்வேலூர் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் குஞ்சரம், புகைப்பட்டி, கூவாடு, எறையூர், பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உளுந்து பயிரிட்டிருந்த ஏழை விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் “ஒவ் வொரு மழைக்காலத்திலும் இப்படி பாதிப்புகள் ஏற்படும் போது அதிகாரிகள் பார்வையிட்டு செல்வதோடு முடித்து விடுகின்றனர். நிவாரண உதவிகள் எங்களுக்கு கிடைப்பது அரிதாகத்தான் உள்ளது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் உளுந்து உள்ளிட்ட பல பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. எனவே வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்” என கோரினர்.