tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

சென்னை மாநிலக் கல்லூரியில் சேர  1.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை, மே 29- நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 3  லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப் பட்டு இருந்தன. தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந் தாய்வு நடைபெற்று வரு கிறது.

இந்த நிலையில் தமிழ கத்திலேயே அதிகபட்ச விண்ணப்பங்கள் சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்தி ருக்கின்றன. கடந்தாண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப் பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 80 ஆயிரம் விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்தும், 53 ஆயிரம் விண்ணப்பங்கள் மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட இருப்பதாக கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 3-க்குள் 
ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு !

சென்னை, மே 29- கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3ம் தேதிக் குள் மாணவர் சேர்க்கையை  உறுதி செய்ய உத்தரவி டப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 84,765 இடங்களுக்கு 1,74,756 மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப் பட்டதால் குலுக்கல் முறை யில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரம் பெற்றோரின் செல் போன் எண்களுக்கு ஓ.டி.பி. அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.