சென்னை:
சிஐடியு நடத்தி வரும் சென்னை நிர்மல் பள்ளிக்கு இன்சூரன்ஸ் பென்சனர் டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.கோடம்பாக்கத்தில் உள்ள இன்சூரன்ஸ் பென்சனர் டிரஸ்ட் நிர்வாகியும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவருமான சந்தானம் இல்லத்தில் நிதி அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் நிதி வழங்கப்பட்டது.
நிதியைப் பெற்றுக் கொண்டு அ.சவுந்தரராசன் பேசுகையில், நிர்மல் பள்ளி மாணவர் நலன், முன்னேற்றத்திற்கு எடுத்து வரும் முன் முயற்சிகளை விவரித்தார். சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள குடும்பங்களை சார்ந்த குழந்தைகள் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்திற்கு இது போன்ற பங்களிப்புகளை தொழிற் சங்கங்கள் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.இந்நிகழ்வில் நிர்வாகிகள் எஸ். ராஜப்பா, சுந்தரேசன், பி.வி. நந்தகுமார், ரவி ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு மூத்த தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, ஏஐஐஇஏ நிர்வாகிகள் க.சுவாமிநாதன், ஜெயராமன், எஸ்.ரமேஷ்குமார், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.