சென்னை, மார்ச் 8 - 2024 மக்களவைத் தேர்த லில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடு தலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும், மதிமுகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவா லயத்தில், திமுக தலை வரும், தமிழக முதல்வரு மான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின், தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத் தில், மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெள்ளியன்று கையெழுத் திட்டனர்.
தனிச்சின்னத்தில் மதிமுக போட்டி
அண்ணா அறிவா லயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுக-வுக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடனான ஆலோச னைக்கு பின் எந்த தொகுதி என்பது பற்றி அறிவிக்கப் படும். மாநிலங்களவை இடம் வழங்குவது குறித்து பின்னர் பேசப்படும். தனிச் சின்னத்தில் மதிமுக போட்டி யிடும்” என்று அறிவித்தார்.
பானை சின்னத்தில் விசிக போட்டி
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அளித்த பேட்டியில்,
“திமுக கூட்டணியில் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டி ருக்கின்றன. இந்த தொகுதி களில் தனிச் சின்னமான பானை சின்னத்தில் போட்டி யிடுகிறோம்” என்றார். சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதி களும் ஏற்கெனவே விசிக வசம் உள்ள தொகுதிகள் ஆகும்.
இதன்மூலம் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யில், மக்களவைத் தேர்தலுக் கான தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை அடைந் துள்ளது. ஏற்கெனவே, பிப்ரவரி 24 அன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு இராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி கள் ஒதுக்கீடு செய்யப் பட்டன.
இதில், ஐயுஎம்எல் உடனடியாக வேட்பாளரை யும் அறிவித்தது. தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இராம நாதபுரம் தொகுதியில் தற் போதைய எம்.பி. நவாஸ் கனியே மீண்டும் வேட்பாளராக களமிறங்கு வார் என்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 29 அன்று நடை பெற்ற பேச்சுவார்த்தை முடி வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்கள் ஒதுக்கப் பட்டு தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தா னது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில், திமுக கூட்டணியில் இதுவரை 9 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்த ளிக்கப்பட்டுள்ளது. கூட்ட ணியில் இடம்பெற்றுள்ள பிர தான கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் தலா ஒரு இடம் வழங்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ள