திருப்போரூர்,பிப்.16- ஆதார் கார்டு இருக்கும் போது என்.பி.ஆர் எதற்கு என மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பினார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் குடியு ரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும் குடியுரிமையில் மதத்தைப் புகுத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அருணன் பேசியதாவது: நம் நாட்டின் அரசியல் சாசனத்தி லும், குடியுரிமை சட்டத்திலும் மதம் என்ற சொல் இல்லை. ஆனால் மோடி திருத்தியுள்ள சட்டத்தில் மதம் புகுத்தப்பட்டுள்ளது. ஒருநாட்டில் மக்கள் ஒடுக்கப்பட்டு அவர்கள் புகலிடம் தேடி இந்தியாவிற்குள் வந்தால் அவர்களிடம் எந்த மதம் என்று கேட்பது அசிங்கம். இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கும் குடியுரிமை கிடை யாது. அவர்கள் அனைவரும் இந்துக்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லியில் தாய்மார்கள் போராடினார்கள், அடுத்து மாண வர்கள் மத பேதமின்றி போராடி னார்கள். அவர்கள் மீது கடுமையான தாக்குதலை மத்திய அரசு ஏவியது.
ஏப்ரல் மாதம் வருகிறது
தேசிய மக்கள் தொகை பதிவேடு ஏப்ரல் மாதம் வரப்போகிறது. பண மதிப்பிழப்பில் பாதிக்கப்பட்ட பின் பாஜக அரசின் கொடூரத்தைப் புரிந்து கொண்டது போல், தேசிய மக்கள் தொகை பதிவு நடக்கும் போது அதன் தாக்கத்தை உணரப்போகிறார்கள். இதில் அப்பா பிறந்த இடத்தை கேட்கின்றனர். அதற்கான ஆதாரம் இல்லை என்றால் சந்தேகத்திற்குரிய குடிமகன் எனப் பதிவு செய்யப்படும். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கம் செய்யப்பட்டது இதில் 19 லட்சம் பேர் குடிமக்கள் இல்லை என அறிவித்தனர். இதில் 60 குழந்தை களுக்கு குடியுரிமை கிடைக்க வில்லை. ஆனால் அவர்களின் பெற்றோர்களுக்கு கிடைத்துவிட்டது. பெற்றோர்கள் குடிமக்கள். குழந்தை கள் இல்லை எனக் கூறி இவர்களை தடுப்பு முகாமில் அடைத்தனர். இதற்காக தொடரப்பட்ட வழக்கில், குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிக்கக் கூடாது எனத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. என் பிள்ளைகளுக்கு குடியுரிமை கிடைக்கும் எனக்குக் கிடைக்காமல் போகலாம் எதுவும் இந்த சட்டத்தால் நடக்கும். நலத்திட்டங்கள் அனை வருக்கும் கிடைக்க வேண்டும் என ஆதார் வழங்கினர். ஆதார் அட்டை இருக்கும் போது என்பிஆர் எதற்கு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.
அனைத்து மக்களுக்குமான பிரச்சனை
குடியுரிமை சட்டத் திருத்தம் இஸ்லாமிய மக்களின் பிரச்சனையா கப் பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவில் உள்ள அனைத்து மக்க ளின் பிரச்சனை. அசாமில் அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட்டதில் 7 லட்சம் மட்டுமே இஸ்லாமியர்கள். 12 லட்சம் பேர் இந்துக்கள். ஒரே மாநிலத்தில் மட்டுமே 19 லட்சம் பேர் அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஆர்சி அமலாக்கப்பட்டால் எத்தனை கோடி பேர் அந்நியர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். இதில் எத்தனை லட்சம் பேர் இஸ்லாமி யர்கள், இந்துக்களாக இருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இது இஸ்லாமியர்களு க்கான பிரச்சனையா? இது ஒட்டு மொத்த இந்தியர்களின் பிரச்சனை.
தீர்மானம் நிறைவேற்றுக
வண்ணாரப்பேட்டையில் நடை பெற்ற போராட்டத்தில் பெண்கள் இளைஞர்கள் மீது தாக்குதல் பலர் மருத்துவ மனையில் உள்ளனர். ஒருவர் இறந்து போனார். இந்த தாக்குதலை எதிர்த்து தமிழகம் முழுவதும் அன்றைய இரவே போராட்டம் நடைபெற்றது. அண்ணா இஸ்லாமிய மக்களுக்காக போராடிய வர். அவரது கண்ணியத்தைக் காக்க ஏப்ரல் 1 ஆம் என்.பி.ஆரை அமல்படுத்தாதீர்கள். அதற்கு முன்னதாக என்.ஆர்.சியை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.
பிப்.26 சென்னையில் மாநாடு
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து முதன் முதலில் இந்தியாவி லேயே தீர்மானம் இயற்றியவர் கேரள முதல்வர் பிரனாயி விஜயன். முதலில் தீர்மானம் இயற்றிய யூனியன் பிரேதேசம் புதுச்சேரி. அதன் முதல்வர் நாராயணசாமி ஆகிய இருவரும் பிப்.26 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் மக்கள் மேடை நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு தமிழக அரசின் கண்களைத் திறக்கட்டும். இவ்வாறு அருணன் பேசினார். கூட்டத்திற்கு முன்னதாக மக்கள் ஒற்றுமை மேடையின் திருப்போரூர் ஒருங்கிணைப்பாளர் கே.லிங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், இ.முகமது நசுருல்லா, சிபிஎம் திருப்போரூர் வட்டச் செயலாளர் எம்.செல்வம், கல்பாக்கம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அப்துர் ரசாக், செங்கை காஞ்சி மாவட்ட ஜமாஅத்துல்லா சபைச் செய லாளர் அசாருதீன், தலித் விடுதலை முன்னணி நிர்வாகி அருட்தந்தை ஜான் சுரேஷ், கோவளம் ஜமாத் தலைவர் சிக்கந்தர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.