tamilnadu

img

சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து

யாஞ்செங் என்ற இடத்தில் உள்ள டியாஞ்ஜியாயி ரசாயன ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அருகில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன. பல அடி உயரத்துக்கு கரும் புகை எழுந்ததால் பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறை போராடி வருகிறது.


இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அருகில் இருந்த குடியிருப்பு மற்றும் பள்ளி கட்டடங்களும், பல வாகனங்களும் சேதமடைந்து உள்ளதாக கூறப்படுகின்றது.

;