சீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 27 தீயணைப்பு வீரர்கள் உட்பட 30 பேர் உடல் கருகி பலியாகினர்.
தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவியது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இந்த பணியில் 100 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 12 மணி நேரத்தினை கடந்தும் வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதை அடுத்து, நேற்று மதியம் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்படவே, தீ மிகவும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த 30 தீயணைப்பு வீரர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அவசரநிலை நிர்வாக அமைச்சகம் காட்டுத்தீயில் சிக்கிய 30 பேர் உடல் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இறந்தவர்களில் 27 பேர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் 3 பேர் உள்ளூர்வாசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.