திருப்பத்தூர், டிச.30- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்டத் தொடக்க விழா, ஓய்வூதியர் தினம், சங்க அலுவலகம் திறப்பு விழா திருப்பத்தூர் ரயில்வே சாலையில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் சா. இராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆ.ஞானசேகரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலத் பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி சங்கக் கொடியை ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் டி.குப்பன், தமிழ்நாடு மின்வாரி ஓய்வுபெற்றோர் நல அமைப்பு கோட்டச் செயலாளர் ஏ.ரங்கன், போக்குவரத்துத் துறை ஓய்வுபெற்றோர் சங்க பொறுப்பாளர் எம். காசி, காப்பீட்டுக் கழக ஒய்வுபெற்றோர் சங்க பொறுப்பாளர் சி. செல்வம், அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஒய்வு பெற்றோர் சங்க உதவி பொதுச் செயலாளர் சி. செஞ்சிமணி உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். எம்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.