சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் லப்பை தெரு பள்ளி வாசலில் தொழுகை முடித்து வெளியே வரும் இஸ்லாமிய மக்களிடம் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.
திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர் ஏ.செல்லகுமாருக்கு வாக்குகள் கோரி கிருஷ்ணகிரியில் திமுக மாவட்டக் கழக பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமையில் நடந்த பிரச்சாரத்தில் சிறுபான்மை மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர்.காங்கிரஸ் தலைவர்கள் தென்னரசு, சுப்பிரமணி, வின்சென்ட், திமுக முன்னாள் நகராட்சி தலைவர் நவாப், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.