கோவையில் பெண் ஒருவர் தனக்கு தானே பிரசவம் பார்த்த சூழலில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை செட்டி வீதி அருகே உள்ள உப்பு கார வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். நகை பட்டறை தொழிலாளி இவரது மனைவி புண்ணியவதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் புண்ணியவதி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தொப்புள்கொடியை முறையாக அழுகாத நிலையில் தாயும் சேயும் மயக்கம் அடைந்தனர். இதனால் இருவரையும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முறையாக பிரசவம் பார்க்காததே குழந்தை உயிரிழப்பு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியகடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய தண்டனைச் சட்டம் 315 என்ற பிரிவின் கீழ் குழந்தையின் தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.