tamilnadu

img

பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் செய்யப்பட்ட 5 பேர் மீதும், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மணிவண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகள் உடன் சேர்த்து,பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதியப்பட்டிருந்தது.