tamilnadu

பெண்கள் பாதுகாப்பிற்கு 20 பெண் எஸ்ஐ விரைவில் நியமனம் ரயில்வே ஐஜி தகவல்

கோவை, டிச. 29–  கோவை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்தரகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில்  ரெயில்வே காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் கள் பங்குபெற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த ஐஜி, கோவை ரயில் நிலையத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக, இன்னும் இரு தினங்களில் புத்தாண்டு வருவதை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என்பதால், சிசிடிவி உள்ளிட்ட ரயில் நிலையங்களின் மேற்கொள்ளப்படும் பாது காப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.  இந்தாண்டு சுமார் 374 குழந்தைகள் மீட்கப்பட்டு உள் ளதாகவும், 95 முறை தவற விடப்பட்ட பொருட்களை உரிய வர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட அவர், சேலம் கோட்டத்தில் 335 ஊழியர்களில் கோவை ரயில் நிலையத்தில் மட்டும் 60 ரயில்வே பாதுகாப்பு படையினர் பணி புரிந்து வருவதாகவும், கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு ரயில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். ரயில்கள் மீது கற்கள் எரிவது அதிகரித்ததை அடுத்து, சில இடங்கள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ரயிலிலே பாதுகாப்பு படை யினர் இருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து  வருவதுடன், பெண் பயணிகளுக்கென்று புதிதாக  20 பெண்  உதவி ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக வும், அவர்கள் 6 மாத பயிற்சிக்கு பின் பணியில் சேரவுள்ள தாக தெரிவித்தார்.