பணி நிறைவு பாராட்டு விழா
தருமபுரி, ஜூலை 30- பிஎஸ்என்எல் ஊழியர் சங்கச் செயலாளர் பி.கிருஷ் ணன்-னின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற் றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன்-னின் பணி ஓய்வு பாராட்டு விழா, புதனன்று தருமபுரி பிஎஸ்என்எல் பொதுமேலா ளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.இளம்பரிதி தலைமை வகித் தார். பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ரவீந்திர பிரஷாத், துணை பொதுமேலாளர் எம்.பிரபுதுரை, சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.மகேஸ்வரன், ஒப்பந்த ஊழியர் சங்க அகில இந்திய உதவித்தலைவர் ஏ.பாபுராத கிருஷ்ணன், ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பி.மாரி முத்து, ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாநிலச் செயலா ளர் ஆர்.ராஜசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பி.கிருஷ்ணன் ஏற்புரையாற்றி னார். கிளைச் செயலாளர் சி.முனிராஜ் நன்றி கூறி னார்.