tamilnadu

img

சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எஸ்இடிசி நிர்வாக இயக்குன ரின் சர்வாதிகார நடவடிக்கையை  கண்டித்து, அரசு விரைவு போக்குவ ரத்து தொழிலாளர்கள் அனைத்து  பணிமனை முன்பும் போராட்டத் தில் ஈடுபட்டனர். எஸ்இடிசி நிர்வாக அதிகாரிக ளின் தான்தோன்றி தனமான நிர் வாக சீர்கேடுகளை கண்டித்தும், தமிழக அரசும் எஸ்இடிசி நிர்வாக மும் பேருந்து பராமரிப்பை மேம் படுத்த வேண்டும். போதுமான பணி யாளர்களை நியமனம் செய்திட வேண்டும். வழித்தட வசூல் குறை வுக்கு மெமோ, பேருந்து பழுதா னால் தொழிலாளியின் சொந்த  பணத்தில் செலவு செய்ய சொல் வது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை கோளாறுக்கு தொழிலாளிகளின் சொந்த பணத்தை கட்ட உத்தரவு இடுவது என எல்லாவற்றிற்கும் தொழிலாளிகளை பலி கடா ஆக்கு வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து கழக  தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, செவ்வா யன்று மேட்டுப்பாளையம் சாலை எஸ்இடிசி பணிமனை முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். சிஐடியு  கோவை அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜா கண் டன உரையாற்றினார். போராட்டத் தினை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன் உள் ளிட்ட தலைவர்கள் உரையாற்றி னர். இதில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் பெருந்திரளாக பங் கேற்றனர். சேலம் சேலம், அஸ்தம்பட்டி அரசு  விரைவு போக்குவரத்து பணிமனை  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க கிளைத் தலைவர் லியாகத் அலி  தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாநில துணைப் பொதுச்செய லாளர் என்.முருகேசன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண் டல பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சம்மேளனக்குழு உறுப்பினர் இளவழகன், விரைவு போக்குவரத்து ஓய்வுபெற்ற சங்க  நிர்வாகி டி.மணிமுடி, மாநில துணைத்தலைவர் பி. செல்லப்பன்,  கிளைச் செயலாளர் சந்திரன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.