tamilnadu

img

பாஜகவினரை பந்தாடிய பவுண்சர்கள்!

கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பப்பில் ஆண்கள், பெண்கள் ஜோடியாக வருவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. இந்த நிலையில் பாஜக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் கும்பலாக இங்கு நடந்த நடன நிகழ்விற்கு சென்றுள்ளனர். ஆனால் இந்த குழுவில் பெண்கள் யாருமே இல்லை. ஆண்கள் - பெண்கள் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பாஜக நிர்வாகி ஜான்சன்.. அதெல்லாம் முடியாது. நான் யார் தெரியுமா? இப்பவே எங்களை உள்ளே விடு.. இல்லை என்றால் நடப்பதே வேறு என்று மிரட்டினார். 
தகராறு பெரிதான நிலையில் பப் நிர்வாகிகள் சார்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணன், டேவிட், ஜெரிஷ் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த விஷயம் கேட்ட ஆத்திரம் அடைந்த ஜான்சன் அந்த பப்பிற்கு மீண்டும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜக நிர்வாகி சண்டை போட்டதால் பதிலுக்கு பவுன்சர்கள் அவரை தாக்கினர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

;