tamilnadu

img

8 மணி நேரத்தை கடந்து எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை

8 மணி நேரத்தை கடந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி 2016 முதல்  2018 ம்  ஆண்டு வரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த போது தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதில்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பாவு புகார் அளித்து இருந்தார். எஸ்.பி.வேலுமணிக்கு  நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்  வழங்கியதன் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் இன்று கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், நமது நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் மற்றும் கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனை  நடத்தப்பட்டு வருகிறது.  தமிழக முழுவதும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார்   உட்பட பலரும் தொண்டர்களுடன் குவிந்தனர். அதிமுக தொண்டர்கள் வேலுமணியின் இல்லம் முன்பாக குவிவதை தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மண அர்ஜுனன், அருண்குமார் ,அமல் கந்தசாமி, சூலூர்  கந்தசாமி , தாமோதரன், ஜெயராம் , ஏ.கே.செல்வராஜ் ஆகிய ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் 250க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். கைதாகாமல் தப்ப முயன்ற அதிமுக தொண்டர்களை காவல்துறையினர் விரட்டி விரட்டி கைது செய்தனர்.முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டின் அருகில் உள்ள மற்ற வீடுகளிலும், கடைகளிலும் ஒளிந்து கொண்ட அதிமுக தொண்டர்களை போலீசார் தேடி தேடி கைது செய்தனர். 

 

;