பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்த வனத்துறைக்கு கோரிக்கை
மேட்டுபாளையம், பிப்.11- மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை சுற்றி காட்டு யானைகள் வருவதால் பாது காப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டு மென பழப்பண்ணை நிர்வகித்தனர் வனத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள கல்லாரில் தமிழக அர சின் தோட்டக்கலை பழப்பண்ணை அமைந் துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் ஒரே சீரான சீதோஷிண நிலை நிலவி வருவதால் நாட்டின் ஒரு சில இடங்களில் மட்டுமே மிக அரிதாக விளையும் மங்குஸ்தான், துரியன், ரம்புட்டான், செர்ரி, வெண்ணைப்பழம், சிங்கபூர் பலா உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளும் அரிய வகை மலர்கள் மற்றும் மூலிகை செடிகளும் இங்கு செழித்து வளர்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1900 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பழப் பண்னை நீலகிரி மாவட்ட மலையடிவா ரத்தில் காணப்படுகிறது. இதைச் சுற்றி யானைத்தடுப்பு சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இப்பகுதியை நோக்கி இரவு நேரங்களில் படையடுக்கும் காட்டு யானைகள் அருகி லுள்ள மரங்களை வேலி மீது சாய்த்து துண்டித்துவிட்டு உள்ளே புகுந்து விடுகி றன. தற்போது பழப்பண்ணையில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்க்க துவங்கியுள்ளதால் இதன் வாசனைக்கு ஈர்க்கப்படும் யானைகள் பண்ணையை முற்றுக்கையிட்டு வருகின்றன. இதனால் பழுத்து மனம் பரப்பும் பலாப்பழங்களை பழப்பண்ணை நிர்வாகத் தினர், வெட்டி அப்புறப்படுத்தி வருகின்ற னர். மேலும் சேதமடைந்த சோலார் மின்வே லிகளை மீண்டும் சரி செய்வதோடு பண்ணையை நோக்கி வரும் யானைகளை விரட்ட வனத்துறையினருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.