tamilnadu

img

அதிகாலை நேரத்தில் பேருந்து இயக்க கிராம மக்கள் கோரிக்கை

உதகை.ஜன 13- அதிகாலை நேரத்தில் பேருந்து இயக் கக்கோரி முக்கிலைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள முக்கிமலை கிராம பொதுமக்கள் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றினை அளித்த னர். இதன்பின்னர் அக்கிராம மக்கள் கூறுகையில், இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதில் பலர் சிறு விவசாயிகளாவர். இந்நிலையில் எங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை அதி காலை வேலையில் உதகை மார்க்கெட்டில் உள்ள ஏல மண்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் வேலைக்கு செல்ப வர்கள் உதகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிகாலையிலேயே செல்ல வேண்டி உள்ளது. ஆனால், இப்பகுதியில் அதிகாலையில் போதிய ச்பேருந்து வசதி இல்லாத காரணத் தால் பள்ளிக்கு செல்லும் குழந்தைக ளும்,வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. தாமதமாக ஏல மண்டிக்கு காய்கறிகளை கொண்டு செல்வதால் விளை பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலையும் கிடைப் பதில்லை. இதுகுறித்து உதகை அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே அதிகாலை நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் தெரிவித்தனர்.

;