tamilnadu

img

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் உடுமலை வட்டாட்சியர் அலுவலக வாளாகம்

உடுமலை, ஆக. 19- உடுமலை வட்டாட்சியர் அலு வலக வாளாகத்தில் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பிடம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைக்க கோரிக்கை எழுந்துள் ளது. உடுமலை வட்டாட்சியர் அலு வலக வாளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம், குற்றவியல் நீதி மன் றம், குடிமைப்பொருள் அலுவ லகம், கிளை சிறைச் சாலை, சார் பதிவாளர் அலுவலகம், இ-சேவை  மையம் ஆகியவை செயல்பட்டு  வருகிறது. இங்கு உடுமலை மற் றும் குடிமங்கலம் பகுதியிலிருந்து அரசு திட்டங்கள் பெறவும், வருவாய் துறையின் சான்றிதழ் களை பெறவும் என தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கிறார்கள்.  இவ்வாறு வட்டாட்சியர் உள் ளிட்ட அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு  வட்டாட்சியர் அலு வலக வாளாகத்தில் குடிநீர் என்று பெயர் மட்டும் எழுதிய குடிநீர் தொட்டியில்  தண்ணீர் வருவது இல்லை. பொதுக் கழிப்பிட கட்டிடம் புதர் மண்டி, விச பூச்சிகள் தங்கும் இடமாக மாறி உள்ள தால், அப்பகுதி திறந்த வெளி கழிப்பிடமானது. இதனால் அங்கு வரும் பொது மக்களுக்கு சுகாதா ரக் கேடு ஏற்படும் நிலையில் தான் கழிப்பிட கட்டிடங்கள் உள்ளது. மேலும்  இரண்டு சக்கர வாகனங்கள் முறையாக நிறுத்தா மல், வாளாகம் முழுவதும் நிறுத்து வதால் மக்கள் நடத்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. மக்களுக்கு அடிப்படை வசிகளை செய்ய வேண்டிய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அடிப் படை வசதிகள் எதுவும் செய் யாமல் இருக்கும் வட்டாட்சியர், எங்களுக்கு எப்படி அரசு திட்டங் களை செயல்படுத்துவார் என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். பொது மக்களின் கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் உடுமலை வட்டாட்சியர் அலு வலக வளாகத்தில் அனைத்து வச திகளும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்ப டுமா? - (ந.நி)