வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கோவை, ஜூன் 16– தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மற்றும் அகில இந்திய இன்சூரஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் அம்பேத்கர் கல்வி,வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வகுப் புகள் ஞாயிறன்று தொடங்கியது.  அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் பணியில் சேர போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர் வுகளை எதிர்கொள்ள தனியார் நிறு வனங்கள் லட்சக்கணக்கான ரூபாய்களை மாணவர்களிடம் கட்டணமாக பெற்று வருகின்றனர். தலித் மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையம் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.  இதன்ஒருபகுதியாக கோவையில் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று, பயிற்சி பெற்று  ஏராளமானோர் வங்கி, ரயில்வே உள்ளிட்ட அரசுத் துறைகளில் பணியில் அமர்ந்துள்ளனர்.  இந்நிலையில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நடை பெறும் போட்டித்தேர்வுகளை எதிர் கொள் வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிறன்று துவங்கப்பட்டது. கோவை - திருச்சி சாலையில் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் யூனியன் அலுவலக மான சரோஜ் பவனில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிக்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை பகுதி தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். இலவச பயிற்சி முகாமை துவக்கிவைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில  துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவ ஞானம் உரையாற்றினார். அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு இலவச பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் துளசிதரன் உரையாற்றினார்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் களச்செயல்பாடுகள் குறித்து மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி நிறை வுரையாற்றினார். இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியது. தேர்வுக்காலம் வரையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் இவ்வகுப்புகளில் தேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.முன்னதாக இநிகழ்ச்சியில்  ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

;