tamilnadu

img

தண்டனையை கேட்டுப் பெற்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்

தேசபக்த சான்றிதழ் கொடுக்க பாஜகவிற்கு அருகதையில்லை - மதுக்கூர் ராமலிங்கம் காட்டம்

கோவை, ஜன. 6 –  விடுதலை போராட்ட வீரர்களை காட் டிக்கொடுத்ததும், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததும் பாஜகவின் மூதாததையர்கள். ஆனால், தண்டனை போதாது என்று கேட் டுப்பெற்று விடுதலை வேள்விக்கு வித்திட் டவர்கள் கம்யூனிஸ்டுகள். தேசபக்த சான்றி தழ் கொடுப்பதற்கு பாஜகவிற்கு எந்த அரு கதையும் இல்லை என மதுக்கூர் ராமலிங்கம் குற்றம்சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி மார்க்சிய இயக்கத்தின் முன்னோடிகளை கௌரவிக் கும் விழா கோவையில் ஞாயிறன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கை நக ரக்குழுவினர் ஏற்பாடு செய்தனர். ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில் நடைபெற்ற இவ்விழா விற்கு ஆர்.மகேந்திரன் தலைமை தாங்கி னார். பி.சுப்பிரமணியன் வரவேற்புரை யாற்றினார். கட்சியின் மூத்த தோழர்கள் ஓ.என்.சண்முகம், பி.இளங்கோவன், சி.தேவ ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக, மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், இந்திய கம்யூனிச இயக்கம் நூற்றாண்டு என்ன சாதித்தது என்று கேட் பார் உண்டு. நேர்மையோடும், பல நூறு தியாகிகளை இழந்தும் இன்றும் அதே உறு திப்பாட்டோடு வேறூன்றி ஒரு இயக்கம் உள்ளது என்றால் அதுவே சாதனைதான். மாறாக, மிஸ்டு கால் கொடுத்து வளர்ந்த பாஜக போன்ற கட்சியல்ல நாங்கள். மீரட் சதிவழக்கு, நெல்லை சதிவழக்கு என ஏரா ளமான அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு பல தோழர்களை மிஸ் (இழந்து) செய்து வளர்ந்த செங்கொடி இயக்கமாகும். எங்கள் இயக்கத்தின் சொத்து செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் அல்ல. எல்லோருக்கும் எல்லாம் என்கிற உன்னத சோசலிச கனவிற்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்த எங்களின் முன் னோடிகள்தான் எங்கள் சொத்து. அவர்கள் வழங்கிய அந்த லட்சிய தீப்பந்தத்தை அடுத்த தலைமுறையாகி நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். எங்களுக்கு பிறகும் இதனை முன்னெடுத்து செல்வார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே கையிலும், இடுப்பிலு மாக எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் தங்க ளின் பிள்ளைகளை மேடைக்கு அழைத்து வந்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இந்திய விடுதலையை காங்கிரஸ் இயக் கம் பிரிட்டிசாரிடம் தவணை முறையில் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருக்கையில் பூரண விடுதலை என்கிற முழக்கத்தை முன் வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இன்று  தமிழகம் உள்ளிட்ட மொழிவழி மாநிலங்கள் இருக்கிறது என்றால் கம்யூனிச இயக்கத்தின் பங்கு அளப்பரியது. இன்றுவரை தாய் மொழி வளர்ச்சிக்கான போராட்டத்தை முன் னெடுத்து வருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தொழிலாளர்களின், விவசாயிகளின் உரி மைக்கான பல்லாயிரக்கணக்கான போராட் டங்களை நடத்தி அதனை மீட்டெடுத்த வர்கள். ஆனால், இன்று போராடிப்பெற்ற உரிமைகள் தொடர்ந்து பறிபோய்க் கொண் டிருக்கிறது. தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு கார்ப்பரேட்டுகளின் நல னுக்காக மாற்றப்படுகிறது. வரலாறு காணாத வேலையின்மையினால் இளைஞர்களின் கனவு பாழாகிக் கொண்டிருக்கிறது. துப் புரவு பணிக்குக்கூட மேல்படிப்பு படித்த பட்ட தாரிகள் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். 

சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும்

இதேபோல், மோட்டார் தொழில் உட்பட அனைத்து தொழில்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அதளபாதாளத்தில் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கிறது. விலை வாசி உயர்வு விண்னைத் தொடுகிறது. சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் நானா  நீயா என போட்டிபோட்டுக் கொண்டிருக்கி றது. ஆனால், மத்திய நிதியமைச்சர் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார். இந்த நெருக்கடி குறித்தெல்லாம் நாடா ளுமன்றத்தில் பேசப்படுவதில்லை. நாடா ளுமன்றத்திற்கே பிரதமர் வருவதில்லை. இதெல்லாம் பேசக்கூடாது என்பதற்காகவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை சட்டத் திருத்தம், என்ஆர்சி, என்ஆர்பி என மக்களின் கவனத்தை திசைத்திருப்ப அமித்சா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட் டத்தை  முன்மொழிகிறார். ஒன்றுபட்ட மக் களை பிரிப்பதற்காகவே இதுபோன்ற கொடூரச் சட்டங்கள் முன்மொழியப்பட்டு வருகிறது. 

மக்களை பிரித்தாலும் சட்டங்கள்

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற வற்றால் அனைத்து தொழில்களும் முட மாகி வரும் நிலையில் இது குறித்து பேசுவ தற்கு இடமளிக்காமல் இன்று சிஏஏ, என் ஆர்சி போன்ற சட்டங்களால் பொதுமக் களின் கவனம் திசை திருப்பப்பட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மக்களை பிரித்தாலும் சட்டங்கள் குறித்து பேசக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகிறது. உண்மையில் இந்த சட்டம் வேண் டும் என்று நீங்களும் பேசுங்கள், வேண் டாம் என்று நாங்களும் பேசுகிறோம். எது  சரி என்பதை பொது விவாதத்தின் மூலம் மக்கள் முடிவு செய்யட்டும் என்கிறோம். ஆனால் வேண்டும் என்பவர்கள் காவல்துறை பாதுகாப்போடு பிரச்சாரம் செய்வார்களாம். ஆனால், வேண்டாம் என்று சொல்ல எங்க ளுக்கு உரிமை இல்லை என்றால், இது ஜன நாயகமா என்கிற கேள்வி எழுகிறது. மறை முகமாக ஒரு அவசரநிலை பிரகடனம் நில வுகிறதோ என்கிற அச்சம் பரவுகிறது. 

குடியுரிமை திருத்தச் சட்டம் நடை முறைப்படுத்தும் முன்பே இவ்வளவு அடக்கு முறை என்றால் இந்த சட்டம் எவ்வளவு கொடூரமானது என்பது இப்போதே உணர முடிகிறது. எதிர்த்து பேசுபவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று பாஜக சிறப்பு தாசில் தாரை நியமித்து சான்றிதழ் கொடுக்கிற ஏற்பாட்டை செய்கிறது. தேசபக்தன் யார் என்று சொல்கிற அருகதை பாஜகவிற்கு கிடையாது. மன்னிப்பு கடிதத்தை நக லெடுத்து வைத்துக்கொண்டு திரும்பத் திரும்ப அளித்தவர்கள் தேசபக்தியை பற்றி பேசக்கூடாது. நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகத்தை செய்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இவ்வளவு தானா என்று தண்டனையை கேட்டு வாங்கி சிறை சென்ற வர்கள் நாங்கள். கோலம் போட்டவரை பாகிஸ்தான் உளவாளி என்கிறார் காவல் துறை அதிகாரி, கோலம் போட்டால் குளோஸ் என்கிறார் பாஜக தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், மாணவர்கள் போராடினால் கல்லூரிக்குள் குண்டு வீசுவேன் என்கிறார் எச்.ராஜா. ஆனால் இவர்களெல்லாம் கைது செய்யப்படமாட்டார்கள். நடைமுறை பேச்சு வழக்கில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்வார்கள். 

போராட்டங்களின் முன்னால் கம்யூனிஸ்ட்கள்

நானே போலீஸ், நானே நீதிபதி என்கிற நிலையில் பாஜகவின் தலைவர்கள் செயல் படுகிறார்கள். மெரினாவில் போராட யாருக் கும் அனுமதியில்லை. ஆனால் பாஜகவினர் போராடுவார்களாம். எடப்பாடி போலீஸ் எச்.ராஜாவின் போலீசாக மாறியுள்ளது. நாங்கள் யார் என்கிற கேள்விக்குள்ளாக் கப்படுகிறார்கள். இஸ்லாமியர்கள் மீது உள வியல், அடையாள சிக்கல்களை ஏற்படுத்து கின்றனர். இதற்கெதிரான வலுவான போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் முன் னெடுப்போம். இந்த போராட்டங்களில் நாங் கள் பின்னால் இல்லை, முன்னால் நிற்கி றோம். மேலும் இப்போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்.  இதன் ஒரு பகுதியாகத்தான்  ஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தம் நடை பெறுகிறது. இந்திய மக்களிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை, உங்களது வேலையை பாதுகாக்க வேண்டும் என்றால், வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துக்கொள். உங்களது வணிகத்தை பாதுகாக்க வேண் டும் என்றால் ஒரு நாள் கடையடைத்து  பாதுகாத்திடு. எதுவும் முடியவில்லையென் றால் ஜனவரி 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 12.10 மணிவரை பத்துநிமிடம் வாகனத்தை நிறுத்தி உங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். எதுவும் அழிக்க முடியாத சக்தியல்ல. கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக ஐந்து மாநிலங்களில் ஆட் சியை இழந்துள்ளது. அதன் கூட்டணி கட்சி யினரே அவர்களை விட்டு விலகிச்சென்று வருகின்றனர். ஆகவே, ஒன்றுபட்ட போராட் டத்தின் மூலம் நமது உரிமைகளை பாது காப்போம் என்றார்.

அதிமுகவின் 11, பாமகவின் ஒன்றும்

இதைத்தொடர்ந்து கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகை யில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத் தச் சட்டத்தை அமித்சா மதியம் 3 மணிக்கு தாக்கல் செய்கிறார். 9 மணிநேர விவாதத் திற்கு பிறகு இரவு 12.50க்கு வாக்கெடுப்பு நடக்கிறது. இந்த சட்டத்தை எதிர்த்து நான் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வாக்களித் தோம். நான் ஏன் எதிர்த்து வாக்களித்தேன் என்பதை மக்களிடம் சொல்வதற்கு எனக்கு உரிமையுள்ளது. ஆனால் நான் இதுகுறித்து பேசக்கூடாது என போலீஸ் அனுமதி மறுக் கிறது. ஏனென்றால் அதிமுகவின் 11 எம்பிக் களும், பாமகவின் ஒரு ஓட்டும்தான் இந்த கொடூர சட்டம் அமலாவதற்கு காரணம். இதனை வெளிப்படுத்தக்கூடாது என்பதற் காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக் கப்படுகிறது.  தலைநகர் தில்லியில் இந்தியா கேட் உள் ளது. அங்கு விடுதலை போராட்டத்தில் பங் கெடுத்து உயிர்நீத்த தியாகிகளின் பெயர்கள் வரலாற்று ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் பாதிக்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்கள். இந்த பட்டியலில் ஒருவர் கூட பாஜக பரிவாரத்தை சேர்ந்தவர்கள் இல்லை. ஆகவே, ஒருபோதும் இந்திய மக்களின் ஒற்றுமையை பிரித்து விட முடியாது. இன்று எழுச்சியோடு நடை பெற்று வரும் போராட்டங்களின் காரண மாகத்தான் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கிடம் பாஜக எம்.பி.,க்கள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என முறையிட துவங்கியுள் ளனர். இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட் டங்களே இதனை வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே, மேலும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார். முன்னதாக, இவ்விழாவில் மார்க்சிய இயக்கத்தை முன்னெடுத்து சென்ற 40க்கும் மேற்பட்ட மூத்த தோழர்கள் அவர்களின் குடும்பத்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி யில் ஒவ்வொரு தோழரின் பங்களிப்பையும், அவர்களின் தியாகங்கள் குறித்தும் பேசப் பட்டு கௌரவிக்கப்பட்டனர். வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு என்கிற வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அப்பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களையும் நெகிழச் செய்தது. மூத்த தோழர்கள் தங்களது தள் ளாத வயதிலும் மேடை ஏறி இன்குலாப் முழக்கங்களை எழுப்பியது இளைய தலை முறையை உத்வேகம் கொள்ளச் செய்தது. இந்நிழ்வில் சிபிஎம் சிங்கை நகரக்குழு உறுப் பினர்கள் பி.கனகராஜ், பி.காளிமுத்து, பி.கிருஷ்ணகுமார், எல்.ஆறுமுகம், கே.கிருஷ்ணராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். 

;