tamilnadu

img

கோவையில் வாட்ஸ் அப் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்

கோவை, ஜூன் 5-புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு வாட்ஸ்அப் மூலம் பிரசவம் பார்த்ததால் பிறந்தகுழந்தையின் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துஉள்ளது. கோவை ரத்தினபுரி அருகே வசித்து வருபவர் ரங்கராஜ், நித்யா தம்பதியினர். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நித்யா கர்ப்பமானதையடுத்து புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையின் ஆலோசனையும், சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அப்போது மகப்பேறு மருத்துவர் சந்திரகலா இல்லாமல், உதவி மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில் முதன்மை மருத்துவர் சந்திராவிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை அனுப்பி அவர் கூறியபடிசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு பெறப்பட்ட குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம்வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்குக் குழந்தை கொண்டு சென்றனர். இந்நிலையில், தற்போது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஜெனிசிஸ் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ராமநாதபுரம் காவல் துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும் படியும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாககுழந்தையின் தாய் நித்தியா கூறியதாவது, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செவிலியர்களே நேரடியாக சிகிச்சை அளித்துள்ளனர். ஒவ்வொரு முறை சிசிக்சை அளிக்கும் போதும், அதை வாட்ஸ் அப்பில்படம் பிடித்து மருத்துவர் சந்திரகலாவிற்கு அனுப்பி, அதன்பின்அவர்பரிந்துரையின்படி செவிலியர்கள் சிகிச்சையளித்தனர். குழந்தையின் உடல் நிலை குறித்துத்எங்களுக்கு முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.குழந்தையின் உடல் நிலை மோசம் அடைவதற்குக் காரணமான மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இந்த மருத்துவமனையின் செயல்பாடு குறித்துநாங்கள் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.இப்புகார் தொடர்பாக விளக்கம் அளித்து மருத்துவர் சந்திரகலா, ஆரம்பத்திலிருந்தே குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சைஅளித்தோம். பிரசவத்தின் போதுநஞ்சுக்கொடி பிரிந்ததால் குழந்தையின் இதயதுடிப்பு குறைவாக இருந்தது. இதனையடுத்தே, உயர்சிகிச்சைக்காக கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். வாட்ஸ் அப் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறறானது எனக் கூறினார்.