tamilnadu

img

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்

திருப்பூர், மே 10-சூலூர் சட்டமன்ற இடைதேர்தலையொட்டி, சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி வெள்ளியன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிகான இடைத்தேர்தல் மே 19ந் தேதியன்று நடைபெறவுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திற்குட்பட்ட சாமாளாபுரம் பேரூராட்சி பகுதியில் 5 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 16 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பள்ளபாளையம் புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சாமாளாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக சாய்வுதளப் பாதை (சுயஅயீ) மற்றும் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதி, மின்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, சாமாளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.