tamilnadu

img

சேலம் அம்மாபேட்டை அருகே பாலம் கட்டி தர வலியுறுத்தி

சேலம், ஏப்.2-சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதால் அப்பகுதியில் பாலம் கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை அருகேநாம மலை என்னும் பகுதி உள்ளது. இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் அந்த வழியே உள்ள சேலம் - கோவை தேசியநெடுஞ்சாலையை கடந்து சென்று வரவேண்டும். அப்போது சாலையை கடந்து செல்லும்போது பலர் விபத்தில் சிக்கி கொள்ளுவதாகவும், நெடுஞ்சாலையில் வாகனங்களில் அதிவேகத்தில் செல்வதால் பள்ளி குழந்தைகள் சாலையை கடந்துசெல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டும் வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டி தர வேண்டும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்நிலையில் ஆசேவம் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலை அருகே கருப்பு கொடியுடன் குவிந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாலம் கட்டி தர வேண்டும் அல்லது சாலை விபத்தை தடுக்க உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வந்த சேலம்அம்மாப்பேட்டை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நாமமலைப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

;