tamilnadu

img

சேலம் மாவட்டத்தில் ஊரக புத்தாக்கத் திட்டம்

சேலம், ஜன. 10- சேலம் மாவட்டத்தில் 7 ஊராட்சி  ஒன்றியங்களுக்குட்பட்ட 154 ஊராட்சிகளில் உலக வங்கி நிதி யுதவியுடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது  என சேலம் மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார். சேலம்  மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை  ஒப்புதல் மற்றும் திட்டம் குறித்த அனைத்து துறை அலுவலர்க ளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது. உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மானது ஊரக நிதி சேவைக ளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் தொழில்  வளத்தை உருவாக்கி ஊரகப் பகு திகளில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள் ளது.இத்திட்டமானது தமிழ்நாட் டில் மொத்தம் 26 மாவட்டங்களில் 120 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,994 ஊராட்சிகளில் ரூ. 918.20 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், தார மங்கலம், மேச்சேரி, பனமரத்துப் பட்டி, வீரபாண்டி, சங்ககிரி மற்றும் ஆத்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய ங்களில் உள்ள 154 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகின்றது. 

இத்திட்டம் செயல்படுத்தப்பட வுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட 154 ஊராட்சிகளில் ஏற்கனவே 2 சமூக வள பயிற்று நர்கள் மூலம் களஆய்வு மேற் கொண்டு, பகுப்பாய்வு அறிக்கை  தயாரிக்கப்பட்டு இத்திட்டச் செய லாக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இதன்படி சேலம் மாவட்டத்தில் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத தொழில் வாய்ப்புகளின் நிலை மற்றும் புதிதாக மேற்கொள்ள வாய்ப்புள்ள தொழில்களை கண்ட றிந்து மாவட்ட அளவிலான பகுப் பாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு அதன் மூலம் முன்னுரிமை பெற்ற பொருட்களை அடையாளம் காணு தல் மற்றும் சார்பு தொழில்களின் உற்பத்திப் போக்கு, மதிப்பு கூட்டு தல் மற்றும் சந்தைப்படுத்தும் வாய்ப் புகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களே முதன்மை பயனாளிகள் ஆவர். மேலும் இத்திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர் கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்து வம் அளிக்கப்படும் என தெரிவித் தார். இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், திட்ட அலுவலர் செல்வ குமார், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் என்.பி.மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;