tamilnadu

img

அதிகாரப்பட்டி -மாரியம்பட்டி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

தருமபுரி, ஜன. 10- அதிகாரப்பட்டி - மாரியம்பட்டி இணைப் புச் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம்  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அதிகாரப்பட்டி முதல் மாரி யம்பட்டி வரையிலான இணைப்புச் சாலை சுமார் 2 கிலோ மீட்டா் தூரம் கொண்ட தாகும். இந்தச் சாலையை மாரியம்பட்டி, அதிகாரப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின் றனா். தற்போது இந்தச் சாலை குண்டும், குழி யுமாகப் போக்குவரத்துக்குப் பயனற்ற நிலையில் உள்ளது.  இதனால், இந்தப் பகுதியில் உள்ள இலகுரக, கனரக வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், விவசாய விளைப் பொருள்களை எடுத்துச் செல்லும் விவசா யிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே, குண்டும், குழியுமாக உள்ள அதிகா ரப்பட்டி-மாரியம்பட்டி தார் சாலையை சீரமைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.