செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

img

சாக்கடை வசதி ஏற்படுத்த கோரிக்கை

அன்னூர், ஜன. 25- அன்னூர் பேரூராட்சி பகுதியில் சாக்கடை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பழைய 17வது வார்டு பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின் றனர். இந்த நிலையில் கட்டபொம்மன் நகர், பழனி கிருஷ்ணா அவின்யூ ஆகிய பகுதியில் உருவாகி 20 வரு கள் கடந்த நிலையிலும் சாக்கடை வசதி, போதிய தெரு விளக்குஇல்லாமல் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீரினை  இல்லத்திற்கு அரு கில் குழி தோண்டி உள்ளே விடுகின்றனர். இதில் சாக்கடை நீர் நிரம்பி சாலையில் செல்கிறது. உள்ளாட்சி மற்றும் மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா!

;