பென்னாகரம், ஜன.18- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாப்பாரப்பட்டி பகுதி குழுவின் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாப்பாரப்பட்டி, பாரதிதாசன் தெருவில் பொங்கல் விழா மற்றும் மக்கள் ஒற்றுமை விழா நடைபெற்றது. இவ் விழாவில் மாதர் சங்கத்தின் பாப்பாரப் பட்டி பகுதி குழு செயலாளர் ராஜாமணி தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப் பட்டது. இதையடுத்து வாலிபர் சங்க நிர்வாகி எஸ்.ராஜசேகர் தலைமையில் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதன்பின் வாழ்த்துரை மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.விசுவநாதன், பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க பகுதி செயலாளர் ஆர்.சக்தி வேல், ஆர்.கே.பி. பெருமாள், வாலிபர் சங்க பகுதி குழு தலைவர் கே. லோக நாதன், மணிகண்டன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங் கினர். நிறைவாக பகுதி குழு பொருளாளர் ஜி.முகிலன் நன்றி கூறினார்.