tamilnadu

img

முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு

நாமக்கல், ஜூலை 8- பள்ளிபாளையம் ஒன்றியம், கொக்கராயன்பேட்டை அம்மாசி பாளையம் பெண்கள் முதியோர் ஓய்வூதியம் கேட்டுமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளி பாளையம் ஒன்றியம், கொக்கராயன்பேட்டை அம்மாசி பாளையத்தில் விவசாயக் கூலி வேலை செய்துவரும் இப்பகுதி முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என  தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தும் எவ்வித நடக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதி பெண்கள் முதியோர் ஓய்வூதி யம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர்.