tamilnadu

img

அன்றும்… இன்றும்…

அன்று…கோவை விமான தள விரிவாக்கம் அங்கு குடியிருப்போருக்கு பாதகம்ஏற்படாத வகையில் மாற்றுத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில், நடத்தை விதிகள் 377ஆவது பிரிவின்கீழ் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் நேரத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பி.ஆர்.நடராஜன் பேசினார்.


இன்று…

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள எங்களது பகுதியில் ஒரு சென்ட் நிலம் சுமார் 15 லட்சம் மதிப்புடையது. ஆனால்,அவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்தான் தர முடியும் என ரவுடிகளை வைத்து, மிரட்டுகின்றனர் எனக்கூறி கோவை சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தனர். இந்நிலையில் மாற்றுத்திட்டம் குறித்து விமான நிலைய ஆணையம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் திருவனந்தபுரம், மங்களூரூ, குவாஹாட்டி, லக்னோ, அகமதாபாத்,ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை மோடியின் நண்பரும், தொழில் அதிபருமான அதானியிடம் 50 ஆண்டு குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் தொடர்பாக பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு வழக்குதொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

;