tamilnadu

img

பனியன் பிரிண்டிங் ஆலைக்கு சீல் வைக்க தயங்கும் அதிகாரிகள்

அவிநாசி, ஆக. 9- அவிநாசி அருகே அனுமதி யின்றி  விவசாய நிலத்தில் செயல் பட்டு வரும் பனியன் பிரிண்டிங் ஆலைக்கு சீல் வைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.  அவிநாசி ஒன்றியம், புதுப்பா ளையம் ஊராட்சியிலுள்ள பூலங் காட்டு தோட்டத்தில் சாய பிரின் டிங் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை சுற்றி, விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் விவசாய நிலங்களில் விவசாயம் செய்தும், ஆடு, மாடுகளை மேய்த் தும் பிழைத்து வருகின்றனர்.

இந்நி லையில், சாய ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, நிலத்தடி யில் விடுவதால், நிலத்தடி நீர் மாசு படும். இதன் மூலம் விவசாயம், கால் நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயி களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து, மாசுக்கட்டுப் பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் செந்தில்முரு கன் புதுப்பாளையம் பகுதியில் சாய ஆலை அமைக்க அனுமதி வழங்கப் படவில்லை எனக் கூறியிருந்த நிலையில், இதையடுத்து, அவி னாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா ளர் சாந்தி லட்சுமி புதனன்று பிரிண்டிங் ஆலையினை ஆய்வு செய்துள்ளதாகத் தெரிய வரு கிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன் றிய அதிகாரி சாந்தி லட்சுமியிடம் கேட்ட போது  பிரிண்டிங் ஆலைக்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை. ஆலை உரிமையாளர் இடம் நோட் டீஸ் வழங்கப்படும் எனக் கூறி னார். சாய ஆலைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் அரசு கண் டிப்புடன் செயல்பட வேண்டும். அதி காரிகள் ஆய்வு செய்த நிலையில், இரண்டு நாட்களாக நடவடிக்கை எடுக்கக் காலம் தாழ்த்துவது ஏன் என்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.