திருப்பூர், ஜூன் 27 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் பெண் களுக்கான மருத்துவ ஆலோசனைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. தியாகி பழனிச்சாமி நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மருத்துவர்கள் எஸ்.ரேணுகா தேவி, செம்மலர் சாந்தி ஆகி யோர் பங்கேற்று பெண்கள் உடல் நலம் குறித்து எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற் றனர். அவர்களது உடல் நலம், ஆரோக் கியம் குறித்த சந்தேகங்களுக்கு மருத்து வர்கள் ரேணுகாதேவி, செம்மலர் சாந்தி இருவரும் விரிவாக விளக்கம் அளித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி உள்பட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.