கோவை, ஜன. 20 - கோவையில் பீட்ரூட் பண்ணையை சேதப்படுத்தி ய 9 மயில்களை விஷம் வைத்து கொன்று எரிக்க முயன்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர். கோவை அடுத்த ஆர்.ஜி.புதூரில் உள்ள பண்ணையில் மயில்களை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தகவலின் பேரில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்ட போது, கனகராஜ் என்பவர் தனது பீட்ரூட் பண்ணையை மயில்கள் சேதப்படுத்திய, 9 மயில்களை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. மேலும், தடயங்களை மறைப்பதற்காக விஷம் வைத்து கொன்ற மயில்களை எரிக்க முயன்ற போது வனத்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972ன் படி கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆறாவது நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.