அவிநாசியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்
அவிநாசி, ஜூலை 6- அவிநாசி அடுத்த திருப்பூர் சிட்டி கிளை முன்புறம் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டு மென பொதுமக்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவிநாசி ஒன்றியம் பூண்டி பேரூ ராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் திருப்பூர் சிட்டி முன்புறம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற் பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து செல்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், அவிநாசி கைகாட்டி பகுதியில் வாக னங்கள் நிறுத்துமிடம் அருகிலும்,அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்தின் அருகிலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடி யாக குடிநீர் குழாயை குடிநீர் வடிகால் வாரியமும், மாவட்ட ஆட்சி நிர்வாகமும் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
அவிநாசி, ஜூலை 6- அவிநாசி அடுத்த எலச்சிபாளையம் பகுதியிலிருந்து தெக்கலூர் செல்லும் வரை உள்ள சாலை மிகவும் பழுத டைந்துள்ளதை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் புது காலனியில் இருந்து தெக்கலூர் செல்லும் வரை சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழி யுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படு கிறது.எனவே உடனடியாக சாலையை செப்பனிட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன
கள் விற்ற 2 பேர் கைது
காங்கேயம், ஜூலை 6- காங்கேயம் சாலை, அம ராவதிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (33). விவசாயியான இவர் தனக்குச் சொந்தமான நஞ்சக்காட்டுத் தோட் டத்தில் உள்ள தென்னை மரங்களில், குழலிபாளை யத்தைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி செல்லமுத்து (65) மூலம் கள் இறக்கி விற்பனை செய்து வந்துள் ளனர். தகவலின்பேரில் வெள்ளக்கோவில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப் போது கள் விற்பனை செய்த இருவரும் கைது செய்யப் பட்டனர்.