தருமபுரி, ஜூலை 6- விலையில்லா மடிக் கணினி கோரிய மாணவர் களையும், பெற்றோர்களை யும் காவல்துறையினர் விரட்டியதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. அரசுபள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் பயிலும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா மடிக்கணினி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு வழங்கி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு, 2018-19 ஆம் கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவ, மாணவிகள் சுமார் 24 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்கaப்படவில்லை. இந்நிலையில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பெரியாம்பட்டி, மாட் லாம்பட்டி, கண்ணிப்பட்டி, தரும புரி, புலிக்கரை பாலக்கோடு, திரு மல்வாடி, அமணிமல்லாபுரம், மாரண்ட அள்ளி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள 2019-20 ஆம் ஆண்டு கல்விபயிலும் மாணவ, மாணவிகள் 3006 பேருக்கு வெள்ளியன்று (ஜூலை 6 ) உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விலையில்லா மடிக் கணினி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை அறிந்த முன்னாள் மாணவர்கள் தான் படித்த பள்ளியில் தனக்கு வழங்க வேண்டிய மடி கணினியை கேட்டு பெறுவதற் காக பெற்றோருடன் பள்ளிக்கு வந்திருந்தனர். குறிப்பாக தருமபுரி அரசு அவ்வையார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் மடி கணினி கேட்டு வந்திருந்தனர். அப்போது மாணவர்களை பள்ளியில் இருந்து காவல்துறையினர் மூலம் அப்புறப் படுத்தினர். மேலும் அங்கிருந்த பெற்றோர் ஒருவரை சட்டையை பிடித்து இழுத்து தள்ளியதுடன் பள்ளியில் இருந்து வெளியே செல்லவில்லையென்றால் வழக்கு பதிந்து கைது செய்வோம் என காவல்துறையினர் மிரட்டினர். இதேபோல் பள்ளியின் சாலையின் ஓரமாக நின்று இருந்தவர்களையும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனு மதிக்காமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமைச்சர் கே.பி.அன்பழ கனை சந்தித்து ஏன் எங்க ளுக்கு மடிக்கணினி வழங்க வில்லை என கேட்டனர். இதற்கு ஒருமாதம் கழித்து வரும் என்று அமைச்சர் கோபமாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இதனால் விரக்தியடைந்த மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு சாலையில் மறியலில் ஈடு பட்டனர். இதனையடுத்து அவர்களை சாலையில் இருந்து அப்புறப் படுத்தினர். இதேபோல், மாட்லாம்பட்டி அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாண வர்கள் நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் ஏன் எங்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை எனக் கேட்டனர். அதற்கு மாணவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து கேட்கக் கூடாது. 3 மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும் கிளம்புங்கள் என கூறி னார். இதன்பின் அங்கிருந்த காவல் துறையினர் மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனையடுத்து மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றத்துடனும் சென்றனர்.