பொள்ளாச்சி, ஜூலை 31 - பொள்ளாச்சி பகுதி யில் நகைக்கடைகள் உட் பட 9 இடங்களில் திடீரென வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி யது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி கடைவீதியி லுள்ள கணபதி ஜுவல் சிட்டி மற்றும் சின்னஅண் ணன் நகைக்கடையிலும், பொள்ளாச்சி அடுத்த நெக மம் பகுதியில் உள்ள ரங்கம் புதூரிலுள்ள வீனஸ் பைபர்ஸ் உரிமையாளர் சின்னச்சாமி வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட னர். இதன்பின்னர் மூட் டாம்பாளையம் , ஏரிப்பட்டி, பகுதியில் உள்ள காயர் நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. இதேபோல், அம்பராம் பாளையம் பகுதியில் உள்ள ஆயில் தொழிற்சாலை மற்றும் ஜமீன் முத்தூரி லுள்ள எம்,கே, ஆர் அமிர்தா இன்ஸ்டிடியூசன் ( நர்சிங் கல்லூரி), வீடு என மூன்று இடங்களிலும், பொள் ளாச்சி டி,கோட்டாம்பட்டி அருகே உள்ள சுப்பையா நகரில் உள்ள அதிமுக நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி இல்லத்திலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட னர். ஒரே நாளில் 9 இடங் களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.