tamilnadu

முஸ்லிம்களை மிரட்டிய பொன்.ராதாகிருஷ்ணன்

குடியுரிமைச் சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்கள்

திருப்பூர், ஜன. 31- எதிர்க்கட்சிகளை நம்பி போ கும் முஸ்லிம்கள், 85 சதவிதமாக இருக்கும் இந்துக்கள் ஒன்று திரண்டால் என்னாகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும், எதிர்க்கட்சிகள் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது, பார திய ஜனதா கட்சிதான் பாதுகாப்பு என்பதை உணர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மிரட்டல் தொனியில் பேசினார். குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை ஆதரித்து திருப்பூரில் இரு இடங்களில் கடந்த செவ்வாயன்று தெருமுனைக் கூட்டங்கள் நடை பெற்றன. இதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விளக்கிப் பேசு வதாகத்தான் பொன்.ராதாகிருஷ் ணன் மேலே கண்டவாறு மிரட்டி னார். குடியுரிமைச் சட்டத்தில் இந் திய குடிமக்களை மதரீதியாக பாகு படுத்திப் பார்க்கக் கூடாது, இது அரசியல் சாசனத்தின் அடிப்ப டைக்கு எதிரானது என்பதே எதிர்க் கட்சிகள் உள்பட நாட்டின் மிகப்பெரும்பான்மையான ஜன நாயக சக்திகளின் குரலாக ஒலிக்கி றது. குடியுரிமை வழங்குவதை மத அடிப்படையில் பார்க்கக் கூடாது என்பதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத பாஜகவினர், சுற்றி வளைத்து மதக் கண் ணோட்டத்தையே முன்வைக் கின்றனர். திருப்பூரில் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சும் மத வாத அடிப்படையில்தான் அமைந் திருந்தது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத் துக்கு எதிராக நாடு முழுவதும் அலை அலையாக மக்கள் எழுச்சி யுடன் போராட்டங்கள் நடந்து வரு வதை ஜீரணிக்க முடியாமல், அதற்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்தார் பொன்னார்.  எதிர்க்கட்சிகள் மதஅடிப்படை யில் செயல்படுவதாக முற்றிலும் உண்மைக்குப் புறம்பான குற்றச் சாட்டை முன்வைத்தார். பாகிஸ் தானின் முகமதுஅலி ஜின்னா வுடன் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களை ஒப்பிட்டு பொன். ராதாகிருஷ்ணன் விஷம் கக்கி னார். மேலும் குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் களுக்கு எதிரானதல்ல என்று நீட்டி  முழங்கிவிட்டு, பாஜக பிரமுகர் படுகொலை, சிறப்பு எஸ்ஐ  படுகொலை ஆகிய சம்பவங்களை சுட்டிக்காட்டி மொத்த இஸ்லாமிய மக்களையும் பயங்கரவாதிகள் என்ற தோனியில் முத்திரை குத் திப் பேசினார். கடைசியாக, இங்கிருக்கும் 15 சதவிகிதமான முஸ்லிம்கள் எதிர்க் கட்சிகளை நம்பிப் போனால் அவர் கள் கைவிட்டு விடுவார்கள், 85 சதவிகிதமாக இருக்கும் இந்துக் கள் திரண்டால் என்னவாகும் என நினைத்துப் பார்க்க வேண்டும் என மிரட்டினார்.

ஆக, குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை ஜனநாயக ரீதியானது என நியாயப்படுத்த முடியாத ஆர்எஸ் எஸ், பாஜகவினர் அவர்களது வழக்கமான மதவாத கண்ணோட் டத்தின் அடிப்படையிலேயே இந்த விசயத்தை முன்னிறுத்து கின்றனர். மேலும் தற்போது குடி யுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதி ராக பெரும்பான்மையான முஸ் லிம்கள் வீதிக்கு வந்து போராடினாலும், அவர்கள் மட்டும் தனியாகப் போராட வில்லை, நாடு முழுவதும் பல்க லைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் இளைய தலைமுறை மாணவர்கள் தோளோடு தோள் சேர்ந்து களத்தில் நிற்கின்றனர். அரசியல் கட்சிகள் மட்டுமின்றி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கள், பொருளாதார அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பண்பாட்டு துறை சார்ந்தவர்கள் என சகல பகுதியினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின் றனர், ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த ஜனநாயக அடிப்படையிலான எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாமல், முற்றிலும் மத அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமே போராடு வதாக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ், பாஜகவினர் உள்ளூர ஆசைப்படு கின்றனர். அப்படி மதஅடிப்படை யில் முஸ்லிம்கள் தனிமைப்பட்டுப் போராடுவதாகக் காட்டுவதன் மூலம், பெரும்பான்மை இந்துக் களிடம் அதற்கு எதிராக, மத உணர் வைக் கிளறிவிட்டு ஆதாயம் அடையலாம் என்று தங்கள் உள் மன ஆசையை வெளிப்படுத்தி வரு கின்றனர். திருப்பூரில் பொன். ராதாகிருஷ்ணனின் விளக்கவுரை என்பது மொத்தத்தில் இதைத் தான் உணர்த்தியது. எனினும் நல்ல விசயம் என்னவென்றால், இரு இடங்களிலும் சேர்த்து சில நூறு பேர் மட்டுமே கலந்து கொண் டனர். பொது மக்கள் அவர்கள் பேச்சை காது கொடுத்துக் கேட்க வும் தயாராக இல்லை என்பதேயே இந்த கூட்டங்கள் உறுதிப்படுத் தின. பொன்னார் பேசிச் சென்ற இரண்டாவது நாள் வியாழக் கிழமை திருப்பூரில் ஏழு கிலோ மீட்டர் நீளத்துக்கு இதுவரை இந்த நகரம் கண்டிராத மிகப்பெரும் மனி தசங்கிலி கைகோர்ப்பு நடை பெற்றது. அதில் முஸ்லிம்கள் பெரு மளவு பங்கேற்றனர் என்பது உண்மைதான். ஆனால் பிற மதத்தினரும், தொழிலாளர் களும், பெண்களும், மாணவர் களும், இளைஞர்களும் அவர் களுடன் ஒற்றுமை முழக்கத் துடன் இரண்டறக் கலந்து நின்ற னர். இதுவே மதக்கண்ணோட்ட அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிக்க நினைக்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கு திருப்பூர் உழைக்கும் மக்கள் அளித்த வலி மையான பதில்! (ந.நி)

 

;