உடுமலை, செப். 15- உடுமலை கிளை நூலகம் எண் 2ல் டிஎன்பிஎஸ்சி குருப் 2 இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நூலக வாசகர் வட்டம் சாணக்கியா இலவச பயிற்சி மையத்துடன் இணைந்து குருப் 2 க்கான தேர்வு அறிவிக்கப்படவுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலை வர் இ.இளமுருகு தலைமை வகித்தார். நூலகர் வீ கணேசன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் வி.கே.சிவக்குமார் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் கள் ஜெயப்பிரகாஷ், ஜெய்கணேஷ் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 54 மாணவ, மாணவியர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்புகள் ஞாயிறுதோறும் நடை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. நிறைவாக பயிற்சி ஆசிரியர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.