tamilnadu

img

கழிவுநீர் தொட்டியாக மாறிய குளத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜன. 6- தருமபுரி அருகே கழிவுநீர் தொட்டியாக மாறிய அதகப் பாடி குளத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள் ளனர். தருமபுரி மாவட்டம், அதகப்பாடி கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் அதகப்பாடி குளம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் ஒட்டுமொத்த கழிவுநீர் இந்த குளத்தில் தான் விடப்படுகிறது. மேலும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இந்த குளக்கரையில் கொட் டப்படுகிறது. இதனால் குளம் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் அடைந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அத கப்பாடி குளமானது முறையான பராமரிப்பின்றி வறண்டு குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இக்குளத்தில் தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க, இந்த குளத்தில் கழிவுநீர் தேங்காத வகையில் மாற்று ஏற் பாடு செய்ய வேண்டும். மேலும் குளத்தை சீரமைத்து நன்னீர் குளமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

;