உடுமலை, ஜூன் 20- உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் ஜமாபந்தியில், பொது மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அலுவலர்களிடம் மனு அளித் தனர். உடுமலை வட்டம், கே. வல்லகுண்டா புரம் பகுதியில் உள்ள வலையபாளையம் கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி இரவில், திலீப் மற்றும் நித்தியானந்தம் இவர்களுடைய விளைநிலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரசாயனக் கழிவுகளை மர்மநபர்கள் லாரிகள் மூலம் கொட்டி சென்றனர். இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதியன்று பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு விளைநிலத்தில் கொட்டு வதற்கு லாரி வந்துள்ளது. இதையறிந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலை மையில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் லாரியை பிடித்து தளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கழிவுகளை கொண்டு வந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலத்தில் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று தரப்பட்ட புகாரின் அடிப்படையில் தளி காவல்துறை சார்பில் ரசீதும் தரப்பட்டது. பின்னர் விவசாய சங்கத்தினருடன் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், விளைநிலத்தில் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளை அகற்றுவதுடன் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியும் தரப்பட்டது. ஆனால் இன்று வரை எவ்வித கழிவுகள் அகற்றப்படவில்லை. கழிவு களை கொட்டிய நபர்கள் மீது நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வியாழனன்று நடை பெற்ற ஜமாபந்தியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் விளைநிலங்களில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுமாறு மனு அளித்தனர்.