tamilnadu

குடியுரிமை மசோதா ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

அன்னூர், ஜன 3- அன்னூர் பயணியர் விடுதி அருகில் வெள்ளியன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அன்னூர் பயணியர் விடுதி முன்பு தேசிய குடியுரிமை திருத்தச் சட்டதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்பு கள் கலந்து கொண்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் முசிர், வாலி பர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் உட்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் முக் கிய நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.