திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தோர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.11- திருவள்ளுவர் சிலைக்கு காவிச் சாயம் பூசியதை கண்டித்தும், சிலையை அவ மானப் படுத்தியவர்களை கைது செய்ய வலி யுறுத்தியும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் தலைமை தாங்கி னார். வடக்கு மாவட்ட செயலாளர் நீலவா ணன், நிர்வாகிகள் தங்கதுரை, தமிழாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், வணிகர் அணி மாநில துணை செயலாளர் ராஜா, அச்சு ஊடக மைய மாநில துணை செயலாளர் ரமேஷ், தொழி லாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் அரசு, கிழக்கு தொகுதி செயலாளர் கனி அமுதன், வக்கீல் அணி மாநில துணை செய லாளர் சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாநகர் மாவட்ட துணை செயலா ளர் புல்லட் லாரன்ஸ் நன்றி கூறினார்.

;