சிபிஎம் செயலாளரை உள்ளாடையுடன் சிறைவைத்து
தேனி,மே 8- நீதிமன்ற ஆணையின் படி சின்னமனூர் காவல்நிலையத்தில் ஆஜராக வந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமனூர் ஒன்றிய ச்செயலாளர் கே.எஸ்.ஆறு முகத்தை முன்விரோதம் காரணமாக ஆடை களை களைந்து, உள்ளாடையுடன் லாக்க ப்பில் சிறை வைத்து வன்மம் தீர்த்த சின்னம னூர் காவல்நிலைய ஆய்வாளர் ,மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருகிற 20 ஆம் தேதி சின்னம னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி யின் தேனி மாவட்ட செயலாளர் டி.வெங்கடே சன் தெரிவித்துள்ளார் . இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் டி.வெ ங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னரும் ,சின்னமனூர் ஒன்றிய செயலாளரும் புலிக்குத்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலை வருமான கே.எஸ்.ஆறுமுகம் மக்களுக்கான பல்வேறு பிரச்சனைகளில் தலையிட்டு வருகிறார் .இதை தாங்கி கொள்ளாத சின்னமனூர் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், இவர் மீது தனிப்பட்ட வெ றுப்பின் காரணமாக வன்மம் கொண்டு 5 பிரி வுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார் . நீதிமன்றம் சின்னம னூர் காவல்நிலையத்தில் ஆஜராகும் படி ஆணையிட்டது.
அதன்படி கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி சின்னமனூர் காவல்நிலையத்தில் ஆஜராக சென்ற கே.எஸ்.ஆறுமுகத்தை ,சமூக ஊழி யன் என்று கூட பார்க்காமல் கிரிமினல் குற்றவா ளியை போல் சித்தரித்து ஆடைகளை களைந்து, உள்ளாடையுடன் லாக்கப்பில் இரவு 11 மணி வரை மனசாட்சி இல்லாமல் சிறை வைத்துள்ளனர் .இந்த மனிதஉரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் , சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கட்சியின் சார்பில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இது வரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை .தவறிழைத்த ஆய்வா ளர்,சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகிற மே மாதம் 20 ஆம் தேதி சின்ன மனூர் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு டி.வெங்கடேசன் தெரி வித்துள்ளார்.