tamilnadu

img

அர்மான் மாலிக் பெயரில் முகநூலில் போலி கணக்கு துவங்கி பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது

இந்தி திரைப்பட  பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கி பதினைந்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் மிரட்டி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தி திரைப்படத்துறையின் பிரபல பின்னணிப் பாடகராக இருப்பவர் அர்மான் மாலிக். அவரது பெயரில் போலியாக முகநூல் பக்கம் மற்றும் டுவிட்டர் கணக்கு ஆகியவற்றை துவங்கிய உளுந்தூர்பேட்டையை சேர்ந்த  மகேந்திர வர்மன் இளம் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு பிரண்ட் ரெக்யூஸ்ட் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அர்மான் மாலிக்கின் இணையதளத்திலிருந்து 2000க்கும் மேற்பட்ட அவரது உண்மையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து,  அவற்றை தான் துவங்கிய போலி கணக்கில் பதிவேற்றம் செய்த மகேந்திரவர்மன், தன்னை அர்மான் மாலிக் என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதையடுத்து 15க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் பழகி பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். இதையடுத்து இன்று கோவை மாட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மகேந்திரவர்மனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகேந்திரவர்மனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.